சித்திரம் பேசுதடி படம் பார்த்த உடனே புரிந்தது மிஷ்கின் ஒரு மிகத்திறமையான இயக்குனர் என்று.அஞ்சாதே படத்தின் ஆரம்பக்காட்சியும், முகத்தையே காட்டாமல் கருப்பு உடையுடனும் மொட்டைத்தலையுடனும் வரும் கதாபாத்திரமும் ,கடைசி கட்ட கரும்புக் காட்டு காட்சியும் தமிழ் சினிமா அதுவரை பார்த்திராத காமிரா கோணங்களும் மிஷ்கின் என்ற இயக்குனரின் ஆளுமையை உணர்த்தியது.
இப்போது நந்தலாலா.இரு வேறு காரணங்களுக்காக தங்கள் தாயை சந்திக்க மனநிலை பிறழ்ந்த இளைஞன் பாஸ்கர்மணியும் ,பள்ளிச்சிறுவன் அகிலும் சேர்ந்து செய்யும் பயணமும் வழியில் அவ்ர்கள் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வேறுபட்ட உணர்வுகளும் தான் படம்!
சமீப காலங்களில் உலக சினிமா என்றும் CLASSIC என்றும்வர்ணிக்கப்படும்
படங்களுக்கு சவாலாக தமிழில் உருவாக்கப்பட்ட படம் நந்தலாலா என்பதில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை.படத்தின் பல காட்சிகள் அதை நிரூபித்திருந்தாலும் என்னை என்னவோ செய்த காட்சி ஐந்து மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது பின்னால் ஊர்ந்துசெல்லும் மலைப்பாம்பும் அந்த காட்சிக்கு இளையராஜா கொடுத்திருக்கும் பின்னணி இசையும் தமிழ் சினிமாவின் உயர்தர ரசனையின் உச்சம்.
இளையராஜா இசை இல்லாதிருந்தால் நந்தலாலாவின் பயணம் நூலருந்த பட்டமாக திசை தடுமாறி போயிருக்கும்.எல்லா கதாபாத்திரங்களையும் தன் இசை மூலம் வழிநடத்திச் செல்கிறார் ராஜா.நான் முன் சொன்ன காட்சியில் அந்த மலைப்பாம்பை கூட நடிக்க வைத்திருந்தது ராஜாவின் பின்னணி இசை.அவருக்குத் துணையாக இருப்பது ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் அற்புத ஒளித்தீற்றல்கள்.
நடிப்பு,திரைக்கதை,காட்சிகளின் குறியீடு,கதாபாத்திரங்களின் அமைப்பு இப்படி எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கிறார் இயக்குனர் மிஷ்கின்.கமல்ஹாசன் நடிகர் திலகம் சிவாஜியை பற்றிக் குறிப்பிடும்போது உலகின் எத்தனை சிறந்த நடிகர்கள் இருந்தாலும் என் கரையில் நான் கண்ட சூரியன் சிவாஜி என்று குறிப்பிடுவார்.அதையே வழிமொழிந்து உலக சினிமாக்கள் பல இருந்தாலும் எனக்குப் புரிந்த,பிடித்த,நான் உணர்ந்த முதல் உலக சினிமா நந்தலாலா என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை!
NANDALALA - Feel proud for tamil cinema!




கேபிள் சங்கரின் போஸ்டர்
ReplyDeleteபோஸ்டர் - திரைவிமர்சனம்
நல்ல விசயத்தை திரும்ப திரும்ப யார் சொன்னாலும் தப்பில்லை..
ReplyDelete