எந்த ஒரு காரியத்தையும் சாமிய கும்பிட்டுட்டு ஆரம்பிக்கணும்!பதிவுலகில் என் முதல் பதிவாக இந்த இசை தெய்வத்தை பற்றி!
ராஜா சார்! இந்த மந்திர வார்த்தையை திரையுலகில் மட்டுமில்லாது பிற உலகிலும் உச்சரிக்காத மனிதர் இல்லை!இறைவனை இசையால் அறியலாம் என்று உணர்த்திய தன்னிகரில்லா படைப்பாளி.கர்நாடக இசை விற்பன்னர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ,ஏழை விவசாயி முதல் பணக்கார முதலாளி வரை அனைவரும் இவரின் ரசிகர்கள்.
இன்றும் தொலைக்காட்சியின் இசை நிகழ்ச்சிகளில் இவரின் அசாத்திய இசைத் திறமையை ஆராய்ந்து ஆச்சர்யப்படும் கலைஞர்கள் ஏராளம்!
ஆன்மீகமாட்டும்,காதலாகட்டும்,சோகமாகட்டும்,சந்தோஷமாகட்டும்,அத்தனை உணர்வுகளுக்கும் இவரின் இசை உன்னதமானது! தாயின்பெருமை (அம்மா என்றழைக்காத),பெண்ணின் கோபம் (ஓ ஒரு தென்றல்) ,மீனவரின் வாழ்க்கை துயரம் (கடலுல எழும்புற),காதலின் வலி (பாடி பறந்த கிளி),காதலின் பரவசம் (காதல் கவிதைகள் படித்திடும் நெரம்),விதவையின் விரக தாபம் (அழகு மலராட),பண்டிகை திருநாளின் கோலாகலம் (அந்தி மழை மேகம்),இயற்கையின் வர்ணிப்பு (மலையாள கரையோரம் தமிழ் பாடும்) இப்படி எந்த சூழ்நிலைக்கும் இவரின் பாடல்கள் சேர்க்கும் அழகு தனி!மேற்கண்ட பாடல்கள் எல்லாம் ஒரு கடல் நீருக்கு ஒரு சொட்டு பதம் என்றளவில் மேற்கோள் காட்டியவை என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை!
இசை என்றால் என்னவென்றே தெரியாத என்னை போன்றவர்களுக்கு கூட கல்யாணி (அம்மா என்றழைக்காத),நளினகாந்தி (எந்தன் நெஞ்சில் நீங்காத),கம்பீர நாட்டை (சின்ன கண்ணன் அழைக்கிறான்), மோகனம் (பூங்கதவே தாழ் திறவாய்) என ராகங்களின் பெயர்களை அறிமுகபடுத்திய இசைப்பிதா!நான் அறிந்தவரையில் பதிவுலகில் ஒருவரின் பிறந்த நாளுக்கு இத்தனை வாழ்த்துப்பதிவுகள் இவருக்கு மட்டும் தான் வந்தது என்பது இவருக்கு இருக்கும் ரசிக கூட்டத்திற்கு சான்று!
இன்றைய இளம் இயக்குனர்களின் திரைப்படங்களுக்கு மட்டும் இல்லாது கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர்களின் குறும் படங்களுக்கும் இவரின் இசை பயன்படுத்தப்படுவதிலிருந்து இவரின் இசை தாக்கம் புரியும்!திரைப்படத்தின் ஒரு சாதாரண காட்சியை கூட இவரின் இசை அசாதாரணமாக்கி விடும் என்பதற்கு கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சி உதாரணம்.
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்-A real musical experience
ராஜா சார்-YOU ARE GENUIS! GREAT!GOD OF MUSIC!
குறிப்பு:பதிவுலகில் என் இந்த கன்னிப் பதிவைப் பற்றி விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:
Post a Comment