அலுவலக வேலை நாள் என்பதால் விடுப்பு எடுக்க முடியாமல் அவதிப்பட்டு ஒரு வழியாக கடந்த செவ்வாயன்று பயணம் முடிவானது.நண்பர்கள் அனைவருக்கும் வேலை பளுவிருக்க தனியே பயணம் செய்ய ஆயத்தமானேன்.TRAIN ONLINE RESERVATION ல் EXPERT ஒருவன் TATKAL SCHEME ல் எனக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து கொடுக்க,BANGALORE TO MAYILADUTHURAI JN. DEPARTURE 19.05 PM ARRIVAL 7.00 AM.பண்ணிரண்டு மணி நேர பயணம் அதுவும் ரயிலில் சில வருட இடைவெளிக்கு பிறகு!நினைக்கும் போதே அலுப்பு தட்டியது!
இருந்தாலும் தெய்வ காரியம் என்பதால் மனதை தேற்றிக்கொண்டு பயணப்பட ஆர்வமானேன்.திங்களன்று அலுவலக வேலையை சீக்கிரமே முடித்துக்கொண்டு Bangalore city Jn சேரும் போது மணி 18.45.அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரயில் வந்து நின்றது.ஆச்சர்யம்!இப்போதெல்லாம் TRAIN சரியான நேரத்துக்கு வருகிறதா என்று! S5 SEAT NO 47 ஐ தேடிப்பிடிப்பதில் சிரமம் எதுவும் இருக்கவில்லை!அதுவும் side lower berth கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.ரயில் பயணத்தில் தான் எத்தனை விதமான மனிதர்களை சந்திக்க வாய்ப்பு நேரிடுகிறது.தாய்,தந்தைரை அன்போடு வழியனுப்பும் மகன் மருமகள்(!) ,காதலியை வழியனுப்ப அவளின் உடைமைகளையும் சுமந்து வந்திருந்த உண்மைக்காதலன் (!) மொத்த ரயிலிலும் தாங்கள் மட்டும்தான் பயணம் செய்வதை போல் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் கூட்டம்.இப்படி எத்தனை எத்தனையோ!
என்னதான் படுத்துக் கொண்டு பயணித்தாலும் ரயிலின் அசைவு தூக்கத்தைக் கெடுத்தது!அவ்வப்போது தர்மபுரி,சேலம்,திருச்சி என்று இறங்கி ஏறும் மனிதர்கள் நடமாட்டமும்!இனிமேல் பெண்களுக்கு lower berth தான் கொடுக்கவேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்! சேலை அணிந்த இளம் பெண் ஒருவர் upper berth ல் ஏறிப்படுத்தது பரிதாபமாக இருந்தது! (சத்தியமாக!). 7.00 am க்கு மயிலாடுதுறை அடைய வேண்டிய ரயில் 7.30க்கு சென்றடைந்தது!
மயிலாடுதுறை சந்திப்பு நினைத்ததை விட பரபரப்பு குறைவாகவே இருந்தது.ஊருக்குள் பயணித்த போதுதான் அது இன்னும் தமிழ் மணம் மணக்கும் பெரிய நகரத்துக்கும் குறைவான சற்றே பெரிய ஊர் என்பது புரிந்தது.பேருந்து நிலையத்தின் அருகே ஏதாவது நல்ல லாட்ஜ் கிடைக்குமா என்று தேடி லாட்ஜின் பெயரில் ஏமாந்து ஒரு சுமாருக்கும் குறைவான லாட்ஜில் தங்க வேண்டியதாயிற்று.
மயிலாடுதுறை யிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் 20 கிமீ.அரை மணி நேர பயணம்.கோயிலை சேரும் போது மணி 11.00 AM.கோயில் செல்லும் வழி எங்கும் நாடி சோதிட மையங்கள்.கோயிலின் முக்கிய மூன்று தெய்வங்கள் வைத்தியநாத சுவாமி,அங்காரகன்,தையல்நாயகி அம்மன்.தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஸ்தலம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது!
திருமண தடை நீக்கும் தெய்வம் என்பதால் பெற்றோர்களையும் அவரது மகன் மகள்களையும் அதிகமாக காண முடிந்தது.அனைத்து தெய்வங்களையும் மனமாற தரிசித்து விட்டு வெளியில் வரும் போது மணி 1.00 pm.நீண்ட நாட்களுக்கு பிற்கு தமிழ்நாட்டின் அற்புத வெயிலை உண்ர முடிந்தது.பசி வயிற்றை கிள்ள இரவில் சரியாக தூங்காததால் உறக்கம் அசத்த room ல் சென்று ஓய்வு எடுப்பது என்று முடிவு செய்தேன்.
இருப்பினும் அலுவலக தொடர் தொலைபேசி அழைப்புகளால் உறக்கம் தொலைந்தது.மாலையில் மயிலாடுதுறை நகரின் கடைத்தெருக்களில் சுற்றிவிட்டு இரவில் கிளம்பிய மயிலாடுதுறை to பெங்ககளூர் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பயணமாகி காலை 6.45 மணி அளவில் பெங்களூர் வந்தடைந்தேன்.
மொத்தத்தில் எந்திரத்தனமான நகர வாழ்க்கையிலிருந்து ஒருநாள் விடுபட்டு பசுமை சூழ்ந்த ஊர்களுக்குள் ரயிலில் பயணமாகி எந்த சலனமும் இல்லாமல் தெய்வ வழிபாடு செய்து திரும்பியது மன நிறைவைத் தந்தது.இனி மாதம் ஒருமுறை இப்படி ஆன்மீக சுற்றுலா பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன்! பார்ப்போம்!
A trip with holy spirit and homely atmosphere!




No comments:
Post a Comment