இடம் - பொழுதுபோக்கும் அது சார்ந்ததும்;
பொருள்-வன்முறை,ஆபாசம் தவிர்த்து எதுவும்;
ஏவல் - சும்மா ஒரு டைம் பாஸ்
Friday, September 17, 2010
ராஜாவுக்கு நான்காம் தேசிய விருது!
என் முதல் பதிவாக ராஜாவைப் பற்றி எழுதிய நேரமோ என்னவோ அவருக்கு நான்காம் தேசிய விருது கிடைத்துள்ளது!இதுவரை இரண்டு தெலுங்கு படங்களுக்கும் சாகர சங்கமம் (1984),ருத்ரவீணா(1989) ஒரு தமிழ் படத்துக்கும் சிந்து பைரவி (1986)தேசிய விருது பெற்ற ராஜா கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பின் (இதிலிருந்து தேசிய விருதுகளின் தேர்ந்தெடுப்பில் உள்ள நேர்மை(?) புரியும் ) இப்பொழுது பழசிராஜா என்ற மலையாள படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதினைப் பெறுகிறார்.இந்த ஆண்டுதான் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிமுகப்படுத்தப்படுவதும் அதை முதன் முதலாக பெறுபவர் ராஜா என்பது பெருமையிலும் பெருமை!
என் முதல் பதிவில் சொல்லி இருந்தைப் போல் திரைப்படத்தின் எந்த ஒரு காட்சியையும் ராஜாவின் பின்னணி இசை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்.அதிலும் காட்சி சிறப்பாக அமைந்து விட்டால் அதற்கு ராஜாவின் பின்னணி இசை சேர்க்கும் உணர்வு அளவிட முடியாதது என்பதற்கு தளபதி படத்தில் வரும் கீழ்காணும் காட்சி ஒரு சின்ன SAMPLE.
4th National Award for Ilayaraja - There is no award to evalaute this man's talent.
No comments:
Post a Comment